"இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான
ஆண்டவர் கூறுவது இதுவே:
உன் கடவுளாகிய ஆண்டவர் நானே!
பயனுள்ளவற்றை உனக்கு கற்பிப்பவரும்
செல்ல வேண்டிய வழியில் உன்னை
நடத்துபவரும் நானே" ஏசாயா 48:-17
வெள்ளி விழா காணும்
Tamilgoodnews.com
April 11th 2000 to --
April 11th 2025
இற்றைக்கு (25)
இருபத்தைந்து
ஆண்டுகளுக்கு
முன்
கனடா
மிசிசாகாவில் April
11th 2000
ஆண்டில்
(திரு
விமலன்
ஞானபிரகாசம்
அவர்களால் திரு கோணேஸ் அவர்களின்
உதவியோடு)
விதை,
அரும்பாகி,
பூவாகி,
பின்சாகி,
காயாகி,
கனியாகி
வெள்ளி
விழா
காணும்
Tamilgoodnews.com
இருபத்தைந்து
ஆண்டுகளை
நிறைவு
செய்து,அகில
உலகிற்கு
ஆண்டவரின்
பணியை காற்றோடு கலந்து நேரடி ஒளிபரப்பு
மூலம் தமிழ் பங்கின் திருப்பலிகள்
பாதுகாவலன் பத்திகை அன்பொளி டிவி கனடா
நற்செய்தி விளக்கவுரைகள் பிரதர் குருஸ்
திவாகரன் அவர்களின் செய்திகள்
தாயகத்திலுள்ள தேவாலயங்களின் திருநாள்
திருப்பலிகள் மறைந்த அருட் தந்தை
தோமஸ் அவர்களின் திருப்பலிகள் நற்செய்தி
விளக்கவுரைகள்இன்னும் பலவற்றை வீட்டில் இருந்தே தேவாலயம்
செல்லமுடியாத முதியவர்கள் பார்த்து
பயனடைய அளப்பரிய பணியை செய்து வரும் Tamilgoodnews.com
க்கு மனமுவந்த நன்றிகள்.
ஆரம்பகாலத்தில் மறக்க முடியாத ஒரு
மகிழ்ச்சியான அனுபவம் அரபு நாட்டில்
பணி செய்த அருட் தந்தை யாழ் மாவட்ட
செய்தியை இந்த இணையதளத்தில் பாதுகாவலன்
பத்திகை திருப்பலிகள் போன்றவற்றை
பார்த்த அவர் பாராட்டி மிகுந்த
மகிழ்ச்சியோடு நன்றியை தெருவித்தார்
. இந்த இணையதளத்தில் யாழ் மாவட்ட ஆயர்
மே .த . கு தோமஸ் சவுந்தரநாயகம்
அவர்களின்
கனடா வருகை திருப்பலி 2008 ல் ஆயர் மே .த .
கு யஸ்டின் ஞானபிரகாசம் அவர்களின் கனடா
வருகை திருப்பலி 2018 ல் மறைந்த
அருட் தந்தை பயஸ் இம்மானுவேல் அருட்
தந்தை போல் ராபின்சன் ,லாரன்ஸ்ந்தை ,ஆல்பர்ட்
மற்றும் பல அருட் தந்தைரின் நல்
ஆசியோடு பயணித்துக்கொண்டிருக்கும்
Tamilgoodnews.com
க்கு எங்கள் மனம் நிறைந்த
வாழ்த்துக்கள் . ஆண்டவரின் எல்லையற்ற
இரக்கத்தின் ஆசியுடன் இந்த
இணையதளத்த்தின் மூலமாக பாரெங்குமுள்ள
கத்தோலிக்க மக்கள் ஆன்மீக வழிபாடுகளை
பார்த்தும் கேட்டும் பங்குபற்றியும்
வருவதனால் 25 ஆண்டை நிறைவு செய்து
மகிழும்
Tamilgoodnews.com
இன்னும்
பற்பல
ஆண்டுகள்
ஆலமரம்
போல
வேரூன்றி
செழித்து
நலமாய்
பலமாய்
மகிழ்வாய்
வாழ
இறைவனை
இறைஞசி
இருகரம்
கூப்பி
மனதார
வாழ்த்துக்கள்
கூறுகின்றோம்
.
பார்த்து
பங்குபற்றி
மகிழும்
இறைமக்கள்
.
|