Tamil Font Guest Book Messages Songs I PHONE Radio Program

அற்புதமானது ஆனால் ஆச்சரியத்துக்குரியதல்ல இந்தப் புகைப்படம்.



நம் இறுதி மூன்று திருத்தந்தையரும் ஒன்றாய் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் போல்திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 

திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ்


 
எதிர்காலத்தை அறிந்த நம்ஆண்டவர் இயேசுவின் அற்புதமான செயற்பாட்டினை எம்மால் புரிந்து கொள்ள முடியுமா?..

திருத்தந்தை: அச்சமின்றி, வெட்கமின்றி இயேசுவை அறிவியுங்கள்   Vatican 11 Sept 2013

செப்.10,2013. அச்சமோ, வெட்கமோ, வெற்றி ஆர்ப்பரிப்போ இன்றி கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும் என கிறிஸ்தவர்கள் அழைக்க ப்படுகிறார்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செவ்வாய்க்கிழமை காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, உயிர்ப்பின்றி
கிறிஸ்தவனாக மாறுவதில் இருக்கும் ஆபத்து குறித்து எடுத்துரை த்ததுடன், கிறிஸ்துவே எப்போதும் நம் வாழ்வு மற்றும் நம்பிக்கையின் மையமாக இருக்கிறார் என்பதையும் வலியுறுத்தினார். பாவத்தையும் மரணத்தையும் வென்ற கிறிஸ்துவே வெற்றியாளர், என்று கூறிய திருத்தந்தை, கிறிஸ்துவை அறிவிப்பதில் அச்சம் கொள்வோர், வெட் கப்படுவோர், உயிர்ப்பு குறித்து நம்பாமல் வெறும் வெற்றி ஆர்ப்பரிப்பில் ஈடுபடுவோர் ஆகியோர், உயிர்த்த கிறிஸ்துவைச் சந்திக்காதவர்கள் என்றார். 

ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இயேசுவே அனைத்தும், அவரே முழுமை, அவரே நம்பிக்கை, அவரே வெற்றியாளர் என மேலும் தன் மறையு ரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை

இயேசுவை அறிந்துகொள்ள அறிவு, இதயம், செயல்கள் என்ற மூன்று மொழிகள் தேவை - திருத்தந்தை பிரான்சிஸ்
 

இயேசுவை அறிந்துகொள்ள 'முதல் தரமான' அறிவைவிட, ஒவ்வொருநாள் வாழ்வில் அவருடன் நாம் ஆழ்ந்த வகையில் ஈடுபடு வ தால் உருவாகும் அனுபவமே தலைச்சிறந்ததென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, புனித மார்த்தா சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், இயேசுவை அறிந்துகொள்ள அறிவு, இதயம், செயல்கள் என்ற மூன்று மொழிகள் தேவை என்று திருத்தந்தை மறையுரை வழங்கினார்.
இவ்வியாழன் வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில் (லூக்கா 9: 7-9) ஏரோது தன் அறிவுப் பசியை மட்டும் தீர்த்துக்கொள்ளும் வகையில், இயேசு யார் என்று தெரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள், மேலோட்டமாக அமைந்தன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இத்தகைய அறிவைவிட, இயேசுவுடன் ஆழ்ந்ததொரு உறவில் ஈடுபடும்போது உருவாகும் அறிவே தலைசிறந்ததேனக் கூறினார்.
மறைக்கல்வி வழியாக நம் அறிவை மட்டும் நிரப்பிய இயேசு போதாது, நம் செபங்கள் வழியாக அவரை மனதார உணர்வதற்கும் முயற்சிகள் செய்யவேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
அறிவு, மனம் இவை இரண்டையும் தாண்டி, நாம் தெருவில நடக்கும்  போது, இயேசுவை நம் செயல்பாடுகளில் உணர்வதும், வெளிப்படுத்  துவதும் மிக உயர்ந்த அறிவு என்று திருத்தந்தை தன் மூன்றாவது கருத்தை வெளிப்படுத்தினார்.
ஈடுபாடு ஏதுமில்லாமல்,  இயேசுவைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டு நம் அறிவை மட்டும் நிரப்புவது ஆபத்தானது என்ற தெளிவையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வெளிப்படுத் தினார்.

 

Pope in Sri Lanka Click Here

Pope in Sri Lanka - Prayer in Madhu Sanctuary - 2015.01.14

Pope in Sri Lanka - Holy Mass - 2015.01.14

Pope in Sri Lanka - Interreligious meeting - 2015.01.13

Pope In Sri Lanka - Welcome Ceremony 2015.01.13

 

 

 

 

Copyright 2000 Catholic New Life Tamil Ministry Canada. All rights reserved