முப்பது ஆண்டுகள் நிறைவிலும் தொடரும் பயணம்……
மொன்றியல் மாநகருக்கு புலம்பெயர் தமிழர் கடந்த 1980ன்
முற்பகுதியிலிருந்து அகதிகளாக அமைதி தேடிப் புலம்
பெயர்ந்து வரத் தொடங்கினாலும்,
தமிழ்க் கத்தோலிக்கரான நாம் எமது மூதாதையர்
கட்டிக்காத்த கத்தோலிக்க விசுவாசத்தை இழக்கவில்லை.
மொழியாலும் - சமய உணர்வாலும் ஒண்று
பட்டு தாய்மொழியாம் தமிழ் மொழியில் கத்தோலிக்க
விசுவாசிகளாக 1988களில் மொன்றியல் மாநகரில் ஒரு
கூட்டுக் குடும்பமாக Georges Vanier Metroவுக்கு
அருகாமை
யில் அமைந்து உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் ஞாயிறு
திருப்பலிகளில் இணைந்து பங்கெடுத்தோம்,
இளவாலையைப் பிறப்பிட
மாகக் கொண்டவரும் திருவுளப் பனியாளர் (Volantas dei)
சபையைச் சேர்ந்தவரும், தற்போது ரொறன்ரோவில் அருட் பணி
புரிபவருமான மூத்த அருட்தந்தை பற்றிக் ஞானப்பிரகாசம்
அடிகள் 1988களில் மொன்றியலில் புனித அந்தோனியார்
ஆலயத்தில் ஞாயிறு மாலையில் தமிழ் மொழியில் திருப்பலி
எமக்காக ஒப்புக் கொடுத்து வந்தார்.
மூத்த அருட்தந்தை பற்றிக் ஞானப்பிரகாசம் அடிகளார்
கடந்த 1988ல் அக்டோபர் மாதத்தில் “Thanks giving
day”க்கு சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் என்னை
அழைத்து,
(திகதி
சரியாக ஞாபகமில்லை. அக்டோபர் 7ம் திகதியாக இருக்கலாம்
என நினைக்கிறேன்)
எங்களுக்குப் பல்வேறு நன்மைகள் செய்துவரும் எல்லாம்
வல்ல இறைவனுக்கு நாங்கள் நன்றியுடைய
வர்களாக இருக்க வேண்டு
மெனவும், இது அக்டோபர் மாதமாக இருப்பதனாலும், அன்னை
மரியாவிற்கு புகழ்ச்சியாகவும் “Thanks giving day”க்கு
முன்வரும் ஞாயிறு திருப்பலியின் முன்னர் செபமாலை
செபிக்குமாறு கேட்டதோடு. ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து
செபிக்குமாறு ஆலோசனை தெரிவித்ததனை ஆண்டுகள் முப்பது
கடந்து நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
அன்னை மரியாவில் ஆழமான நம்பிக்கையுடைய மூத்த அருட்
தந்தை பற்றிக் ஞானப்பிரகாசம் அடிகளார் கடந்த 1988ல்
அக்டோபர் மாதத்தில் மொன்றியல் வாழ் தமிழ் கத்தோலிக்க
மக்களுக்காக “Thanks giving day”க்கு ஓரிரு நாட்களுக்கு
முன்னர் ஆரம்பித்து வைத்த ஞாயிறு திருப்பலிக்கு
முன்னதாக செபமாலை செபிக்கும் பக்தி முயற்சி 1988
அக்டோபர் முதல் 2018ம் ஆண்டில் அகவைகள் முப்பதைக்
கடந்து தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வரிய செயலின் வழியாக கடந்த 1988ல் அக்டோபர் மாதம்
தொடக்கம் 2018ம் ஆண்டில் இன்று வரை எங்களை வழி
நடத்தும் எல்லாம் வல்ல மூவொரு இறைவனுக்கும், தனது
அன்புப் பிள்ளைகளான, எமக்காக அனுதினமும் பரிந்து பேசும்
மீட்பின் அன்னை மரியாவிற்கும் சிரம் தாழ்த்தி நன்றி
தெரிவிக்கிறேன்.
மொன்றியலில் ஞாயிறு திருப்பலிக்கு முன்னதாக செபமாலை
செபிக்கும் பக்தி முயற்சியை கடந்த 1988ல் ஆரம்பித்து
வைத்த மூத்த அருட்தந்தை பற்றிக் ஞானப்பிரகாசம் அடிகளாரை
எல்லாம் வல்ல மூவொரு கடவுள் தொடர்ந்தும் நிறைவாக
ஆசீர்வதித்திட மீட்பின் அன்னை மரியா பரிந்து பேசிட
வேண்டு மெனவும் செபிக்கிறேன்.
மீட்பின் அன்னை மரியாவிற்குப் பிடித்தமான செபமாலை
செபிக்கும் பணியில் தகுதியற்ற பாவி என்னையும்
மொன்றியலில் ஒரு கருவியாக எடுத்துப்
பயன்படுத்துவதற்காக எல்லாம் வல்ல மூவொரு கடவுளுக்கும்,
மீட்பின் அன்னை மரியாவிற்கும் எனது இதயபூர்வமான
நன்றிகளை இப்பதிவின் வழியாகப் பணிவோடு சிரம் தாழ்த்திச்
சமர்ப்பிக்கிறேன்.