Free Hit Counters

Prayer Book

 

அருட்தந்தை ஜோர்ஜ் திசநாயக்க   பாடல் 

  

Sep,13,2013 குணமாக்கல் வழிபாடு அருட்தந்தை ஜோர்ஜ் திசநாயக்க

     

 

மொன்றியல்மீட்பின்அன்னைமறைத்தளத்தில் 
குணமாக்கல்வழிபாடுகள்

Montreal Canada  10 Sept 2013

Picture
 

புலம்பெயர் தமிழர்கள் வாழும் (கனடா) மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தளத்தில் திருகோணமலை மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட் தந்தை ஜோர்ஜ் திசநாயக்க அவர்களால் 01.09.2013ம் திகதி ஞாயிற்றுக் கிழமை - 06.09.2013ம் திகதி முதல் வெள்ளி - மற்றும்08.09.2013ம் திகதி ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் பரிசுத்த நற்கருணை எழுந்தேற் றத்துடனான குணமாக்கல் வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டன

01.09.2013 திகதி ஞாயிறு வழிபாட்டு வேளையில் அருட்திரு அன்ட்ரூ தவரஜசிங்கம் அடிகளாரும் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார். அருட்தந்தை ஜோர்ஜ் திசநாயக்க தமது ஞாயிறு திருப்பலி மறை யுரையில் தற்போதைய காலத்தின் தேவையை உணர்ந்து அன்னையாம் திருச்சபை அருங்கொடை மறுமலர்ச்சி வழிபாடுகளை கத்தோலிக்க ஆலயங்களில் அனுமதித்துள்ளது எனக் குறிப்பிட்டு- கத்தோலிக்க திருச்சபையிலேயே முதன்முதலில் அல்லேலூயா என்ற வசனம் வழி பாட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டது எனவும் தெளிவாகக் குறிப்பிட்டு - இவ்வாறான வழிபாடுகளில் பங்கெடுத்து பரிசுத்த ஆவியாரின் அருளைப் பெற்றுக்கொள்ள கத்தோலிக்க மக்கள் முன்வருவதில் தயக்கமடையக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். 

06.09.2013 ம் திகதிமுதல் வெள்ளிதின மாலை வழிபாட்டு வேளையில் மீட்பின் அன்னை மறைத்தள பங்குத்தந்தை அருட்திரு யூட் அமலதாஸ் செபஸ்தியாம்பிள்ளை அடிகளாரும் இணைந்து திருப்பலி ஒப்புக் கொடுத்தார். 

அருட்தந்தை ஜோர்ஜ் திசநாயக்க தமது முதல் வெள்ளி தின மறையுரையில் பரிசுத்த நற்கருணையின் மகிமையையும் - பரிசுத்த திருப்பலியின் மகத்துவத்தையும் குறித்து தெளிவாகவும் விபரமாகவும் குறிப்பிட்டு - பரிசுத்த நற்கருணையில் தமக்கிருக்கின்ற நம்பிக்கையைத் தெளிவுபடுத்த - சுனாமிப்பேரலை வேளையில் திருகோணமலை மறை மாவட்டத்தில் இருக்கின்ற குவாட்டலூப் அன்னையின் ஆலயத்தில் அமைந்துள்ள நற்கருணநாதர் சிற்றாலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்அத்தோடு கத்தோலிக்க திருச்சபையில் திருப்பலி வழிபாட்டை விட மேலான வழிபாடு எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டு - கத்தோலிக்கரான நாம் பலிகளில் எல்லாம் மேலான கல்வாரிப்பலிக்கு 
முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மேலும் ஆண்டவர் இயேசுவின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உட் கொள்ளும் திருவிருந்துப் பந்தியில் நாம் தகுதியான முறையில் பங்கெடுக்க வேண்டுமென்ற கருத்தையும் வலியுறுத்தினார்.

 08.09.2013ம் திகதி ஞாயிறு தினத்தில் அன்னை மரியாவின் பிறந்த தினப் பெருவிழாத் திருப்பலி வழிபாட்டினை அருட்தந்தை ஜோர்ஜ் திசநாயக்க தலைமைதாங்க -அருட்திரு அன்ட்ரூதவரஜசிங்கம் அடிகளாருடன் - மீட்பின் அன்னை மறைத்தள பங்குத் தந்தை அருட்திரு யூடஅமலதாஸ் செபஸ்தியாம்பிள்ளை அடிகளாரும் இணைந்து திருப்பலி ஒப்புக்கொ டுத்தனர்.அருட்தந்தை ஜோர்ஜ் திசநாயக்க தமது மறையுரையில் அன்னை மரியாஇறைவனின் தாயாக மட்டுமல்ல திருச்சபையின் அன்னையாகவும் - நம் ஒவ்வொருவரின் மீட்பிற்காகப் பரிந்து பேச விரைந்து ஓடிவரும் அன்னையாக இருக்கின்றதனைச் சுட்டிக்காட்ட - அன்னை மரியா புனித எலிச்பெத்தை சந்திக்கச் சென்றதனையும் - கானாவூர் சம்பவத்தையும் குறிப்பிட்டார். 

இறைவனாலே எமக்கருளப்பட்ட மிகப்பெரிய அன்பளிப்பாக – பரிசாக ஆண்டவர் இயேசுவிடம் எம்மை அழைத்துச் சென்று எமக்கு அருளு க்குமேல் அருளைப் பெற்றுத்தருகின்ற தாயாக அன்னை மரியா இருப் பதாகத்தெரிவித்தார்.இவ்வுலகில் 8000க்கும்மேற்பட்ட இடங்களில் அன் னை மரியா காட்சிகொடுத்து பாவிகளுக்காக பரிந்துபேசி வருவத னைக் குறிப்பிட்டு - எமது குடும்பங்களில் தினமும் குடும்ப செபமாலை செபிக்கநாம் கண்ணும் கருத்துமாக கவனத்தைச் செலுத்தவேண்டிய முக்கியத்துவத்த வலியுறுத்தினார். மேலும் ஆண்டவர் இயேசுவைக் குறிப்பிடும்போது அல்லது திருச்சபையைக் குறித்துப் பேசும்போது அன்னை மரியாவைத் தவிர்த்துக் குறிப்பிடாது இருக்க முடியாதுஎன்று கூறினார் – நாம் கன்னி மரியாவிற்கு செலுத்தும் வணக்கம் ஆண்டவர் இயேசுவிற்கு காட்டுகின்ற அன்பாகவும் இருக்கின்றது - ஆதலால் கத்தோலிக்கரான ஒவ்வொருவரும் அன்னை மரியாவைக் தமது இல்லங்களுக்கு அழைத்துச் செல்பவர்களாக - கன்னி மரியா எப்போதும்
 எம்மோடு இருக்கின்றார் என்ற உணர்வு எம்மில் இருக்க வேண்டு மெனவும் குறிப்பிட்டார்

 01.09.2013ம்திகதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, 06.09.2013ம் திகதி முதல் வெள்ளி - மற்றும்08.09.2013ம்திகதி ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் இடம்பெற்ற குணமாக்கல் வழிபாடுகளில் மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தளப் பங்கு மக்கள் மட்டுமல்ல மொன்றியல் வாழ் பெரும ளவிலான இந்து மத மக்களும் பங்கெடுத்து பரிசுத்த ஆவியின் குண மாக்கல் அருளைப் பெற்றுக்கொண்டனர். 


01.09.2013ம் திகதி ஞாயிறு முதல் 01.09.2013ம் திகதி ஞாயிறு வரை மூன்று நாட்கள் குணமாக்கல் வழிபாடுகளை நடாத்த ஒழுங்கமைத்து - தம்மை வரவேற்று உதவிகள் புரிந்த அருட்திரு அன்ட்ரூ தவரஜசிங்கம் அடிகளாருக்கும் - மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தள பங்குத் தந்தை அருட்திரு யூட் அமலதாஸ் செபஸ்தியம்பிள்ளை அடிகளா ருக் கும் 08.09.2013ம்  திகதி ஞாயிறு திருப்பலி வேளையில் அருட்தந்தை ஜோர்ஜ் திசநாயக்க தமது நன்றியையும் - அன்பையும் தெரிவித்துக் கொண்டார்.

கோடை விடுமுறை காலத்தில் களியாட்டம் - கொண்டாட்டம்- சுற்றுலா என நாட்களைச் செலவிட்ட பின்னர் செப்டம்பர் முதல் வாரத்தில் மூன்று நாட்கள் இடம்பெற்ற குணமாக்கல் வழிபாடுகளில் பங்கெடுத்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது உள்ளத்தில் ஒரு புதிய உற்சா கத்தைத் தருவதாக குணமாக்கல் வழிபாடுகளில் பங்கெடுத்த பலரும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் குணமாக்கல் வழிபாடுகளை நடாத்திய அருட்தந்தை ஜோர்ஜ் திசநாயக்க அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Picture
 
Picture
 
Picture
 
Picture
 
Picture
 

மொன்றியலில் இருந்து  தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா 
இணையத்தளத்திற்காக சூசைமுத்து அல்பிரட் ஞானராஜா

 
Copyright 2000 Catholic New Life Tamil Ministry Canada. All rights reserved.